வியாழன், 15 செப்டம்பர், 2011

நேர்முகத் தேர்வு

இனியவளே!
உலக காதலிகளே
இனி மேலாவது
தோல்வியை
தாங்கி கொள்வார்களா?
என்று
நேர்முகத் தேர்வு வைத்து
காதலர்களை
காதலியுங்கள்!!! 


இலவச இணைப்பு

இனியவளே!
உன்
மனக்கடையில்
காதல் புத்தகம்
வாங்கினால்
பின்னாளில்
இலவச இணைப்பாக
தோல்வி கிடைக்குமோ? 


ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வேதனை

இனியவளே!
ஒரு
மணி நேரம்
உனை பார்க்காமல்
மணிக் கணக்கில்
இறைவனிடம்
மன்றாடினேன்...!
ஒரு
நாள்
உனை பார்க்காமல்
பார்க்காத
நாளே
வேண்டாமென்று
விண்ணப்பித்தேன்...!
இனி
நீயே
இல்லையென்றால்
உயிரே வேண்டாம்
என்று
கண்டிப்பேன்...!

---------------------------------------------------
காதலி - தனிமை + காதல் = வேதனை 
--------------------------------------------------- 


பச்சை மர ஆணி

இனியவளே!
நாம்
காதலித்த நாட்கள்
செல்லரித்து போக...
உன்னை
வர்ணித்த கவிதையில்
சொற்கள் பிரிந்து விழ...
நீ
உதடு சேர்த்து கொடுத்த
முத்தம் காய்ந்து போக....
நீ
தொட்ட இடங்களில்
வியர்வை வந்து அழிக்க...
நாம்
சந்தித்த நாட்கள் எல்லாம்
சத்தமில்லாமல் மறைய...
நீ
காதலித்த
என்னை
மணிக்கணக்கில் மறந்து போக...
ஆனால்
பச்சை மர ஆணி போல்
மனதில்
பதிந்த
உன் நினைவு மட்டும்
இன்னும் மறையாமல்....


பெற்றோர்

இனியவளே!
சூரியனும்
நிலவும்
ஊடல் செய்யும்
திரு நாள் இல்லை என்றாலும்;
பூவை
வண்டு
கற்பழிக்கும்
ஒரு நாள் இல்லை என்றாலும்;
சோலையை
தென்றல்
வெறுக்கும்
கோடை நாள் இல்லை என்றாலும்;
இயற்கை
அழிவுதான்
என்று,
மறு நாள் கூறும் அறிவியல் கண்டுபிடிப்பு;
என்னை
நீ
மறப்பதற்கு காரணம்
இந்நாள் கூறுவேன்
உன் பெற்றோரின் கண்டிப்பு!!! 


சனி, 3 செப்டம்பர், 2011

வாழ்த்து

இனியவளே!
மார்ச் 14 [என் பிறந்த நாள்]
அமைதியை
கலைக்கும்
நோக்கத்துடன்
சுற்றும்
சூரியன்
தன் கதிரால்
வாழ்த்து சொல்ல...
ஆர்ப்பரிக்கும்
புல்லினங்கள்
ஆரவாரத்துடன்
வாழ்த்து சொல்ல...
இனிய பொழுதில்
இனிப்புடன்
மற்றவர்
வாழ்த்து சொல்ல...
ரோஜா மொட்டு
மலர்ந்து
மெல்லிசையுடன்
வாழ்த்து சொல்ல...
தென்றலும்
தேகத்தை உரசி
வாழ்த்து சொல்ல...
நம்பியிருக்கும்
நட்பும்
நன்றியுடன்
வாழ்த்து சொல்ல...
எதிர்ப்பார்த்தேன்
இதயத்தை
கொடுத்த
உன் வாழ்த்தை...! 


அலட்சியம்

இனியவளே!
காலை
கதிரவன்
தன் விளையாட்டை
ஆரம்பித்த பொழுது,
அவனும்
திடுக்கிட்டுப் பார்க்க,
வெண்ணிலவு
வெட்க்கப் பட வந்த
புது நிலவாக
நீ
என்னை
அணைத்து
முத்தம் பதித்த நொடியும்;
மாலை கதிரவன்
ஓய்வுக்கு செல்லும் பொழுது,
மாலையை
மயக்க
மல்லிகை மலரும் பொழுது,
வசந்த பெண்ணிலவு
உன் மடியில்
நான்
தலை சாய்ந்த நொடியும்;
கனவாக
தோன்றியது
நீ
என்னை
அலட்சியமாக
மறந்த நொடியில்!!! 


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதல் தோல்வி

இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்! 


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

புது வரலாறு

இனியவளே!
அணு அணுவாய்
அழிந்து
ஆழமாய்
காதலித்த
அம்பிகாவதி -அமராவதி...
மணிக்கணக்கில்
காதலித்து
மந்திரிக்கப் பட்டவர்களாய்
காதலித்த
லைலா-மஜ்னு...
சந்தித்த வேளையிலும்
காதல் செய்து
சடலங்களாகியும்
காதலித்த
சலீம்-அனார்க்கிளி...
என்று
தோல்வி கண்ட
வழிகாட்டிகளும் இருக்க,
பெண்ணுக்கு
அலட்சியம்
தேசிய குணம்
என்று தெரிந்தே
காதலித்தேன்
வரலாற்றில்
இடம் பிடிக்க...! 


சுடிதார் நிலவு

சடலங்களை போல
இருக்கும்
மரங்களை
உயிர்ப்பிக்க
தென்றல்
வரும் வேளையில்
மேகப் புடவை
தேவையில்லை என்று
அலட்சியமாக
வீதியில் இறங்கி
சுடிதார் அணிந்து வந்த
நிலவாக
உன்னை
பார்த்த பொழுது
களவாடப்பட்டேன்
உடன் பொழுதே
தற்காலிக பைத்தியமானேன்...!
காதல் கொண்டேன்....
காதலும் தோல்வியும்
ஒட்டி பிறந்தவர்கள்
என்று தெரியாமல்....!


வரம்

இனியவளே!
காதலியிடம்
காதலை
கூறும் போது
மறக்காமல்
மன உறுதியை இறைவனிடம்
கேள்...!
பழகிய பிறகு
அவள் தரும்
தோல்வியை
தாங்கி கொள்ள! 



திருநாள்

இனியவளே!
முப்பது நாட்கள்
தேடல்
விளையாட்டில்
சூரிய காதலனும்
நிலா காதலியும்
சேரும்
திருநாள் உண்டு
என்றால்
நானும் நீயும்
இணைவோம்...!
நிமிடங்கள்
வருடங்களாக மாறினாலும்; 



பயம்

இனியவளே!
ரோஜாவே! ரோஜாவே!
என்னை
முள்ளால்க் குத்தி
குருதியை
சாயமாக
பூசிக் கொள்ளாதே!
வெண்ணிலவே! வெண்ணிலவே!
என்னை
பள்ளத்தில் தள்ளி
நீ
மட்டும்
மேகத்தில் சுத்தாதே!
தென்றலே! தென்றலே!
என்னை
காதலால் சுட்டு
நீ மட்டும்
இதமாய் இருக்காதே!
இனியவளே! இனியவளே!
என்னை
அலட்சியமாக
மறந்து
ஏமாந்து போகாதே! 



இனியவள்

இனியவளே!
உன்னை
நிலவு
என்றால்
வெட்க்கப்பட்டு
காதலை மறைப்பாய்...
ரோஜா
என்றால்
கோபப்பட்டு
காதலை குத்துவாய்...
தென்றல்
என்றால்
புயலாய் புறப்பட்டு
காதலை அழிப்பாய்...
பெண்
என்றால்
அலட்சியப்பட்டு
காதலை மறப்பாய்...
இனியவள்
என்றால்
காதல் பட்டு
இனியவன் என்னை காதலிப்பாய்...! 


மறக்காதே!!!

இனியவளே!
சிரித்தாய்...!
இதயத்தை தொலைத்தேன்;
காதலித்தாய்...!
உலகை மறந்தேன்;
மறந்தால்
உயிரையும் துறப்பேன்!


முதன் முதலாய்

இனியவளே!
நான்
ரசித்த
முதல் சப்தம்,முதல் அமைதி,
முதல் பாடல்,முதல் கவிதை,
முதல் தினம்,முதல் சினம்,
முதல் மழை,முதல் அலை,
முதல் வானவில்,முதல் தென்றல்,
முதல் சூரியக்கதிர்,முதல் மோதல்,
முதல் நிலவொளி,முதல் இருட்டு,
முதல் படம்,முதல் பாடம்,
முதல் தேர்ச்சி,முதல் தோல்வி,
முதல் அழுகை,முதல் கவலை,
முதல் ஆனந்தம்,முதல் கோபம்,
முதல் இயற்கை,முதல் செயற்கை,
முதல் ஆலை,முதல் சோலை
நினைவேயில்லை....!
முதல் காதலையும்
அதை தந்த
உன்னையும் மறக்க முடியுமா?
என்
நினைவிருக்கும் வரை.....


சத்தியம்

இனியவளே!
நான்
பிறந்தவுடன்
கண் திறந்தேன்...
உன்னை
காதலித்தவுடன்
நினைவு மறந்தேன்...
நீ
மறந்தவுடன்
உயிர் துறப்பேன்...!


துணுக்குகள்

இனியவளே!
உன்னோட
மனசதான்
காற்றில் கரைச்ச....
இப்ப
என்னோட
காதலத்தான்
மனசுல மறைச்ச....
*உன்
திருமண நாள்;
என்
இறுதி நாள்!
*என்னோட
காதலி நீ
"மண்ணோடு போ" என்று
மறந்து விடுவாயோ?
என்னை!
என்னோட
மனசு
"கல்லாகி மாறி"
மறந்து விடுமா?
உன்னை! 



வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ஒப்பந்தம்

இனியவளே!
காதலுடன்
ஓர் 
ஒப்பந்தம்!
தோல்வி தரும்
காதல் விதையை
மனிதரில் 
தூவாதே என்று! 


தோல்வி

இனியவளே!
கண்ணால்
காதல் தந்தாய்!
காதலால்
கவிதை தந்தாய்!
பின்
எதனால்
தோல்வி தருவாய்!


புலம்பல்

இனியவளே!
பல நாட்கள்
பழகியது
ஒரு நாளும்
மறக்க வில்லை!
பழகாத
ஒரு நாளும்
பல நாட்க்கள்
ஞாபகமில்லை!
நித்தம்
ஒரு கவிதை தந்தாய்!
பித்தம்
தலைக்கேற காதல் தந்தாய்!
சத்தம்
இல்லாமல் என் சகாப்தம் அழித்தாய்!
உன் குரல்
நான்
தினமும் கேட்கும் இன்னிசையோ!
உன் முகம்
நான்
தினமும் கனவில் பார்க்கும் முகமோ! 


ஞாயிறு, 31 ஜூலை, 2011

மறக்காத நினைவு

இனியவளே!
வாழ்ந்தால்
உன்
அங்கமெல்லாம் உயிராக
மகிழ்ந்து வாழ்வது
இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி
உயிர் துறப்பது என்று
சத்தியம் செய்தப்படி
சிதைந்தது என் மனசு!
என் காதல் தேசக் கொடி போன்ற
உன்
கூந்தல் நீர்
படாமல்
வறண்டது என் இதயம்...!
உன்
முகங்கண்டு
வேகங்கொண்டு
காண வந்த போதும்
புது ஜனனம் கொண்டேன்;
உனை காணாதப் பொழுது
ஒரு மரணம் கண்டேன்!
உன்
நினைவு
வரும் பொழுதெல்லாம்
உயிர் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளை தூக்குது!
அது கவிதையாக வளருது;
ஆசையும் துறந்து போனேன்
அதிகாரத்தையும் மறந்து போனேன்
நீ என்றதும் பறந்து போவேன்
காதல் தேசத்திற்கு...!
மறக்காத நினைவு
துறக்காத உறவு
இதுவே என்
இனியவள்!
பனிக்குடம் உடைந்து
உலகம் வந்த நாள் முதல்
இதயம் பதிவு செய்த
நினைவுகள் அனைத்தும்
மரண படுக்கைக்கு சென்றாலும்
நீயும் நானும்
ரசித்த பொழுது ஒவ்வொன்றும்
என் மரணத்திலும்
இதயம்
மறக்காத நினைவுகள்!


ஞாயிறு விடுமுறை

இனியவளே!
ஞாயிறு விடுமுறை...!
நாளெல்லாம் நினைச்சு
மகிழ்ச்சி இல்லாட்டி
இருக்கவே இருக்கு
மனசு சொல்லும்
ஞாயிறு விடுமுறை!
வாழும் வாழ்க்கையும்
தூங்கி கிடக்கிறது;
ஞாயிறு என்று
வரும் பொழுதெல்லாம்
அது
விழித்துக் கொள்கிறது!
ஒவ்வோரு ஞாயிறு விடுமுறையின் போது
இருதயம் மகிழ்ந்து பிறக்கிறது!
ஆனால்
இன்றைய ஞாயிறு விடுமுறை....!
தடம் மாறி விட்டது;
நிலவைப் பார்க்காத சூரியனாக...!
பூவைக் காணாத தேனீயாக...!
தென்றலே இல்லாத சோலையாக...!
சோலை இன்று பாலைவனமாக!
ஆமாம்
உன்னை
பார்க்காத நாட்க்களில்
மரணம்
எனக்கு
படுக்கை தட்டி போடுகிறது;
ஆறாவது நாளின்
முடிவில்
மனதை ஆட்டி படைக்கும்
இனம் புரியாத
கவலை...!
உனைப் பார்க்காமல்....!
கடந்த
சில காலமாய்
இப்படியோரு கனவு...?
ஞாயிறு விடுமுறையே
இல்லை என்று;
ஞாயிறு அன்று
சாவென்றால் வருத்தமில்லை....!?
சாவின் அருகில்
நீ
இருந்தால் மகிழ்வேன்!
எல்லா இரவுகளையும்
நான்
விழுங்கினேன்;
ஆனால்
உனைப் பார்க்காத
ஞாயிறு இரவு
என்னை
விழுங்கியது இன்றுதான்!
இந்த நாள்
என் உயிரின்
முக்கால் பாகத்தை
உறிந்து விட்டது;
ஏ ஞாயிறே!
என் ஒவ்வொரு நாளும்
என்னவளுடன்
இருக்கும் போது
அவள் இல்லாத
நீ மட்டும் எதற்கு?
மரணம் வரைக்கும் சென்ற நான்
இன்னொரு ஜனனம் காண்பது போல
ஞாயிறே நீ போய் விடு....!
என்னவளை என்னுடன்
சேர்த்து விடு...!
இனியவளே!
பொழுது சாய சாய
உன் நினைவு
என் நிழலாக! 


கவிஞன்

இனியவளே!
விழிக்காத
இரவு தந்த
விழித்த
விண்மீன்களும்,
விழித்த
பொழுது தந்த
விழி சாயாத
சூரியனும்,
சோலையின்
வரிகளுக்கு
தென்றலின்
இசையை சேர்த்து
பாடும் குயில்களும்,
தனிமையில்
கவிப்பாடும்
என்னைப் பார்த்து
சிரிக்கும்....!
என்னுடன்
இல்லாமல்
நினைவாக
இருக்கும்
உன்
காதலுடன்
கவிப்பாடுவேன்
என்
நினைவிருக்கும் வரை....! 


மொழி

இனியவளே!
காற்றின் 
மொழியை அறிந்தேன்
உனக்கு தகவல் சொல்ல!
கிளியின்
மொழியை அறிந்தேன்
உனக்கு 
தூது சொல்ல!
தமிழ்
மொழியை அறிந்தேன்
உனக்கு
காதல் சொல்ல! 


சுகம்







இனியவளே!
காற்று
தரும்
மென்மையை விட
நீ
தரும்
காதல் சுகமானது!

நினைவு

இனியவளே!
நீ என்னை
பார்க்கா விட்டாலும்
நீ என்னிடம்
பேசா விட்டாலும்
நினைக்கிறாயே!
நினைவு மட்டும் போதும்...!
என்னிதயத்தை
நினைக்க செய்வது
நீதானே!
நினைப்பதை
முடித்து விடு!!
முடியாது என்றால்
மூன்று ஜென்மம்
கடன் வாங்கினாலும்
வாழ முடியாது...!?
உன்னால் முடியும்
என்றுதானே
நானும் நினைத்தேன்!
முடியாது என்றால்
நான் முடிப்பேன்
நீ சொல்வதை!!!


இயற்கை நியதி

இனியவளே!
ஆண்டவனே
என்னைக் கேட்டாலும்
கொடுக்க மாட்டேன் என்றாயே!
உனக்கு தெரியுமா?
சூரியனிடமிருந்து
வெளிச்சத்தையும்!
நிலாவிடமிருந்து
பொலிவையும்!
ரோஜாவிடமிருந்து
புன்னகையையும்!
தென்றலிடமிருந்து
இதத்தையும்!
பிரிக்க முடியாது;
அதுப்போல
உன்னிடமிருந்து என்னையும்
பிரிக்க முடியாது!
மாற்றங்கள் நிறைந்த
வாழ்க்கைதான்....!
இயற்க்கையை மாற்ற முடியாதே!
உன்னிடமிருந்து என்னை
யாராலும் பிரிக்க முடியாது!!!


காத்திருப்பு

இனியவளே!
சூரியனும்
அணுகுண்டாக மாறி
வெப்பம் உமிழ்ந்தான்!
தென்றலும்
திராவகமாக மாறி
தோலை உரித்தது!
அதிசயம் போல
நொடி பொழுதும்
மாறாமல்
என்னை வதைத்தது!
அதெப்படி
உனக்கு காத்திருக்கும்
நரகப் பொழுது மட்டும்
இவ்வாறு எனக்கு தெரியுது!
ஆனால்
காத்திருந்த கண்கள்
உனை காணாதப் பொழுது
தன்னையே
குருடாக்கிக் கொள்ள
முயற்ச்சிக்குது! 


நிரந்தரம்


இனியவளே!
பிரிவு நிரந்தரமல்ல
உண்மைதான்....!
சில சமயம்
பிரிவு
விரோதியாக
மாறி விடும்!
சில சமயம்
பிரிவு
சுகத்தைத் தரும்!
பிரிவின் முடிவில்
உன்னை
சந்திப்பது என்றால்,
சாவின் விளிம்பில் நின்ற
எனக்கு
உயிர்ப்பிச்சை அளிப்பது
போலத் தோன்றும்!!!
ஆனால்
பிரிவு நிரந்தரமானால்
என்னிதயம்
உன் நினைவை
நினைத்துக் கொண்டே
துடிப்பை நிறுத்தும்!!!

முட்டாள்

இனியவளே!
புது வருடம் பிறந்தாலும்
புத்துணர்ச்சி தரும்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
பிறந்த தினமாக
இருந்தாலும்
சூரியனுக்கு முன்
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
தொழில் தொடங்கினாலும்
தோள் கொடுக்கும்
தோழி
உன்னுடைய வாழ்த்தை
எதிர்பார்த்தேன்!
அதுப்போல
முட்டாள்களின் தினமான
இன்று (ஏப்ரல்1)
உன்னிடம் மட்டும்
ஏமாற நினைத்தேன்!
கண்டிப்பாக
முட்டாளாக்கி விட்டாய்!
தொலைபேசியில்
பேசுவாய் என்று
ஏமாந்தேன்....!
ஆனால்
வாழ்க்கை முழுவதும்
முட்டாளாக்கி விடாதே!


முடிவு

இனியவளே!
சுற்றும் சூரியனும்
ஒரு நாள்
ஒரு நொடி நிற்கும்!
வற்றாத ஆறும்
வடிந்த பின்
கடலில் கலக்கும்!
பிறக்கும்
ஒவ்வோரு வருடமும்
டிசம்பரில் முடியும்!
சொல்ல முடியாத
சோகமும்
அழுகையில் முடியும்!
சில்லிடும் தென்றலும்
சில சமயம்
குளிர்மையில் முடியும்!
அமைதியான இசையும்
அருமையான
ஆர்பாட்டமாக மாறலாம்!
எதுவாகயிருந்தாலும்
முடிவு தெரியும்....!
ஆனால்
என் முடிவு....?!
உன் முடிவுதான்! 


ஆசை

இனியவளே!
உன் விரல் பிடித்து
வீதியில் நடக்க வேண்டும்;
தோளோடு தோள் சாய்ந்து
சலிக்காமல் கவிதை
உன்னிடம் சொல்ல வேண்டும்;
நான் கொடுத்த
ஒற்றை ரோஜா
உன் கூந்தலில் ஏற வேண்டும்;
அந்தி வானத்தில்
நீயும் நானும்
இரத்த சூரியனை ரசிக்க வேண்டும்;
எண்ணி எண்ணி கலைத்து
விடப்பட்ட விண்மீனை
நீ சொல்லி
திரும்ப எண்ண வேண்டும்;
வானத்தின்
ஏழு வண்ண் ஓவியமாம்
வானவில்லை
நானும் நீயும் ரசிக்க வேண்டும்;
காலையில்
என் விழி விழிக்கும் போது
உன் விழி இருக்க வேண்டும்
என்றெல்லாம்
ஆசைப்பட்டேன்;
ஆனால்
இன்று
பேசினால் மட்டும் போதுமே! 


கல்லறை

இனியவளே!
சூரியன்
நிலாவின் நினைவோடு
ஊரைச் சுற்றுவது போல
உன் நினைவோடு
நாட்க்களை கிழித்து
ஊரைச் சுற்றும் போது
பலருக்கு அறிமுகம் ஆனேன்;
இருந்தாலும்
என்னை எனக்கு
அறிமுகம் செய்தது
உன் விழிதானே!
உன்னால்தானே
நானும் வாழ
வாழ்க்கைக்கு விண்ணப்பம் செய்தேன்!
எனக்கே எனக்கு
என்னை பிடிக்காதப் பொழுது
உனை விரும்பிய மனம்
தினம் உனை நினைக்காவிடின்
கல்லறைதான்
என்னின்
அரண்மனை........!


நரக வேதனை

இனியவளே!
காலை கதிரவன்
கண் விழித்தாலும்
என் கண்
விழிக்க மறுக்குது!
என் இராஜ்யத்தின்
சூரியன்
நீதான் என்னுடன் இல்லையே!
என் தொலைந்த முகவரியை
தேடி பார்த்தேன்;
உன்னிதயம்தான்
அதுவென்று
உன் கண்களை
பார்த்த பின் தெரிந்தது!
முகவரிக்கு அடையாளமாக
உன் கண்கள்!!!
நீ
என்னுடன் இல்லாத
தினங்களில்
நரகம்
என்னை குத்தகைக்கு
எடுத்து விட்டது....
உனை பிரிந்தது
கண நேரமாக இருந்தாலும்
நரக வேதனைதான்; 


காதல் ஞானம்

இனியவளே!
என்றோ ஒரு நாள்
நாமிருவரும்
சந்தித்தால்
பேருந்தில்
இறங்கும் இடம்
மறந்து
இறக்கி விடப்படுகிறேன்....!
சுற்றி நடப்பது
தெரியாமல்,
பொசுக்கென்று
பூகம்பமே வந்தாலும்
அறியாமல்,
உன்னை
பார்த்தவாறு இருக்கிறேன்....!
கண்களில்
என்னை
ஆட்டிப் படைக்கும்
ஒளிக்க்ற்றை கொண்டுள்ளாயா?
விஞ்ஞானம் தெரிந்திருந்தால்
அறிந்திருப்பேன்;
காதல் ஞானத்தை கொண்டுள்ளதால்
காதலிக்கிறேன்....! 


பிடிவாதம்

இனியவளே!
சின்னதொரு பிரிவு
ஆடும் ஆட்டத்தையே
தாங்க முடியவில்லையே!
முடிவு தெரியாமல்
ஆடும் ஆட்டத்தை
நினைத்தால்
உயிர் மொத்தமும்
வாயின் வழியாக
எட்டிப் பார்க்குது!
தன்னந்தனியே
நான் நடக்கையில்,
"ஒரு வேளை
நீயில்லாத முடிவென்றால்"
என்னுயிர்க்கு கடைசியாக
இதயம் அடிக்கும்
அலாரமும்
துல்லியமாக கேட்குது!
நம்பிக்கை உள்ளதடி...!
என் உணர்வுகள்
உனை எட்டியதென்றால்,
உன் பிடிவாதத்தை
கை விடுவாய் என்று!


திரைப்படம்

இனியவளே!
நீயில்லாத
வாழ்க்கையே
எனக்கு
வேண்டாம் என்றேன்.
"அதுவெல்லாம்
வெறும் வார்த்தைதான்....
எல்லோரும் இப்படிதான்"
என்று கூறினாள்
உன் தோழி!
சமீபத்திய திரைபடம்
பார்த்து விட்டு
நிஜ வாழ்க்கையையும்
திரை வாழ்க்கையையும்
ஒப்பிட்டுள்ளாள்;
இருக்கட்டும்....
நீ கிடைக்காமல்
நான் இறந்த பிறகாவது
அவளுக்கு தெரியட்டும்
"என்னுயிர் நீதான்" என்று! 


வாழ்க்கை துணை

இனியவளே!
காலைப் பொழுதில்
கண் விழிக்கும் முன்னே
கதிரவனாய் வருகிறாய்!
தனிமையில் நானிருந்தால்
தவிப்பை போக்க
தென்றலாய் வருகிறாய்!
தோல்விகளில் தொலைந்த பொழுது
தோள் கொடுக்க
தோழியாய் வருகிறாய்!
கவலைகளில் கழுத்து வரை
புதைந்திருந்த பொழுதும்
காக்க வருகிறாய்!
மாலைப் பொழுதில்
உன் நினைவில் மயங்கியிருந்தால்
நிலவாக வருகிறாய்!
எல்லையில்லாமல் எவ்விடம்
நான் சென்றாலும்
நிழலாய் வருகிறாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
புரிய வைக்க!
என்னுள் பாதியாக!
எப்பொழுது வருவாய்?