ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஞாயிறு விடுமுறை

இனியவளே!
ஞாயிறு விடுமுறை...!
நாளெல்லாம் நினைச்சு
மகிழ்ச்சி இல்லாட்டி
இருக்கவே இருக்கு
மனசு சொல்லும்
ஞாயிறு விடுமுறை!
வாழும் வாழ்க்கையும்
தூங்கி கிடக்கிறது;
ஞாயிறு என்று
வரும் பொழுதெல்லாம்
அது
விழித்துக் கொள்கிறது!
ஒவ்வோரு ஞாயிறு விடுமுறையின் போது
இருதயம் மகிழ்ந்து பிறக்கிறது!
ஆனால்
இன்றைய ஞாயிறு விடுமுறை....!
தடம் மாறி விட்டது;
நிலவைப் பார்க்காத சூரியனாக...!
பூவைக் காணாத தேனீயாக...!
தென்றலே இல்லாத சோலையாக...!
சோலை இன்று பாலைவனமாக!
ஆமாம்
உன்னை
பார்க்காத நாட்க்களில்
மரணம்
எனக்கு
படுக்கை தட்டி போடுகிறது;
ஆறாவது நாளின்
முடிவில்
மனதை ஆட்டி படைக்கும்
இனம் புரியாத
கவலை...!
உனைப் பார்க்காமல்....!
கடந்த
சில காலமாய்
இப்படியோரு கனவு...?
ஞாயிறு விடுமுறையே
இல்லை என்று;
ஞாயிறு அன்று
சாவென்றால் வருத்தமில்லை....!?
சாவின் அருகில்
நீ
இருந்தால் மகிழ்வேன்!
எல்லா இரவுகளையும்
நான்
விழுங்கினேன்;
ஆனால்
உனைப் பார்க்காத
ஞாயிறு இரவு
என்னை
விழுங்கியது இன்றுதான்!
இந்த நாள்
என் உயிரின்
முக்கால் பாகத்தை
உறிந்து விட்டது;
ஏ ஞாயிறே!
என் ஒவ்வொரு நாளும்
என்னவளுடன்
இருக்கும் போது
அவள் இல்லாத
நீ மட்டும் எதற்கு?
மரணம் வரைக்கும் சென்ற நான்
இன்னொரு ஜனனம் காண்பது போல
ஞாயிறே நீ போய் விடு....!
என்னவளை என்னுடன்
சேர்த்து விடு...!
இனியவளே!
பொழுது சாய சாய
உன் நினைவு
என் நிழலாக! 


0 விமர்சனம்:

கருத்துரையிடுக

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..