ஞாயிறு, 31 ஜூலை, 2011

மறக்காத நினைவு

இனியவளே!
வாழ்ந்தால்
உன்
அங்கமெல்லாம் உயிராக
மகிழ்ந்து வாழ்வது
இறந்தால்
நீ விட்ட மூச்சை
என் கடைசி மூச்சாய் உள்வாங்கி
உயிர் துறப்பது என்று
சத்தியம் செய்தப்படி
சிதைந்தது என் மனசு!
என் காதல் தேசக் கொடி போன்ற
உன்
கூந்தல் நீர்
படாமல்
வறண்டது என் இதயம்...!
உன்
முகங்கண்டு
வேகங்கொண்டு
காண வந்த போதும்
புது ஜனனம் கொண்டேன்;
உனை காணாதப் பொழுது
ஒரு மரணம் கண்டேன்!
உன்
நினைவு
வரும் பொழுதெல்லாம்
உயிர் சக்தியெல்லாம்
ஓரிடம் குவித்து
முயற்சியூட்டி முளை தூக்குது!
அது கவிதையாக வளருது;
ஆசையும் துறந்து போனேன்
அதிகாரத்தையும் மறந்து போனேன்
நீ என்றதும் பறந்து போவேன்
காதல் தேசத்திற்கு...!
மறக்காத நினைவு
துறக்காத உறவு
இதுவே என்
இனியவள்!
பனிக்குடம் உடைந்து
உலகம் வந்த நாள் முதல்
இதயம் பதிவு செய்த
நினைவுகள் அனைத்தும்
மரண படுக்கைக்கு சென்றாலும்
நீயும் நானும்
ரசித்த பொழுது ஒவ்வொன்றும்
என் மரணத்திலும்
இதயம்
மறக்காத நினைவுகள்!


10 கருத்துகள்:

  1. அருமை அருமை

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை

    பதிலளிநீக்கு
  3. காதலின் வலி உணர்ந்தவரோ.... கவிதை அருமை நண்பரே..வாழ்த்துகள்:-)

    பதிலளிநீக்கு
  4. அழகான ரசனையுடன் வரிகளை அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள் நல்லாருக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு

உங்கள் விமர்சனம்தான் என் தளத்தின் முடிசூடா மன்னன்..